

இந்த முறை கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் களம் காணும் 7 வேட்பாளர்களும் முதல் முறையாக போட்டியிடுபவர்கள். அதிமுகவின் பொன்.ஜெயசீலன், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வழக்கறி ஞராக பணிபுரிந்து வருகிறார். திமுகவின் எஸ்.காசிலிங்கம், நெல்லியாளம் நகராட்சியின் முன்னாள் தலைவர். இவர்கள் தவிர, ரா.கேதீஸ்வரன் (நாம் தமிழர் கட்சி), ஜே.பாபு (மக்கள் நீதி மய்யம்), ஏ.யோகேஸ்வரன் (தேமுதிக) மற்றும் சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர்.
தமிழகம் - கர்நாடகம்- கேரளா ஆகிய மூன்று மாநில எல்லையில் அமைந்துள்ள கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியை அதிகபட்சமாக திமுக 6 முறையும், அதிமுக3 முறையும், காங்கிரஸ், சுதந்திரா கட்சி தலா ஒரு முறையும் வென்றுள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக, இந்த தொகுதி திமுக வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.