

கடலூர் மாவட்டத்தில் வாக்குப் பதிவு மையங்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.
கடலூர் டவுன்ஹாலில் இருந்து 9 சட்டமன்ற தொதிகளுக்கு உட் பட்ட 3,001 வாக்குச்சாவடி மையங்களுக்கு, வாக்காளர்கள் மற்றும்வாக்குப்பதிவு மைய அலுவலர்க ளுக்கு தேவையான கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறியது:
வாக்களிக்க வருபவர்கள் சுகாதாரமான முறையில் வாக்க ளிக்கவும், வாக்குச்சாவடிகளில் பணிபுரிபவர்கள் பாதுகாப்பான முறையில் பணியாற்றவும், அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தெர்மா மீட்டர், ஓஆர்எஸ்பவுடர், கிருமிநாசினி, முகக் கவசங்கள் உட்பட 16 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளது. மாவட்டநிர்வாகத்தின் மூலம் கொடுக்கப் படும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.