தேர்தல் விதிமீறல் : கட்சியினர் மீது : 80 வழக்குகள் பதிவு :

தேர்தல் விதிமீறல் : கட்சியினர் மீது : 80 வழக்குகள் பதிவு :
Updated on
1 min read

கடந்த மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், அருப் புக்கோட்டை, திருச்சுழி, சிவ காசி, வில்லிபுத்தூர், ராஜ பாளையம் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்தல், அனுமதி யில்லாத இடங்களில் பிரச் சாரம் செய்தல், தலைவர்களின் சிலைகளில் மூடப்பட்டிருந்த திரைகளை அகற்றியது, பொது இடங்களில் கட்சி விளம்பரப் பலகைகள் வைத்தது, அனுமதியின்றி கட்சி சின்னம் வரைதல், அதிக எண்ணிக்கையிலான வாக னங்களை பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல் வேறு காரணங்களால் விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உட்பட பல்வேறு கட்சியினர் மீது இதுவரை 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in