தேர்தல் பணியை வீடியோ எடுக்க ஒரே நிறுவனத்துக்கு ஒப்பந்தம் : எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு

தேர்தல் பணியை வீடியோ எடுக்க ஒரே நிறுவனத்துக்கு ஒப்பந்தம் :  எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பணியை வீடியோ எடுக்க ஒரே நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து புகைப்படத் தொழி லாளர்கள் கடையடைப்பு செய்தனர்.

கடந்த காலங்களில் தேர்தல் பணிகளை வீடியோ எடுக்க அந்தந்த மாவட்ட புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்களுக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. ஆனால் இந்த தேர்தல் பணிகளை வீடியோ எடுக்க தமிழகம் முழுவதும் ஒரே நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் கொடுத்துள்ளது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.மதுசூதன்ரெட்டியிடம் ஏற்கெனவே மனு கொடுத்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்காததால் சிவகங்கை மாவட்ட ஒளிப்பதிவாளர்கள், போட்டோகிராபர்ஸ் நலச் சங்கத்தினர் நேற்று கடையை அடைத்து போராட்டம் செய்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் 1,520 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in