வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் - வன உயிரினங்கள் கணக்கெடுப்பு தொடக்கம் :

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் -  வன உயிரினங்கள் கணக்கெடுப்பு தொடக்கம் :
Updated on
1 min read

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் வெளிமான், கடமான் உள்ளிட்ட வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த சரணாலயத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வனஉயிரினங்கள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணிகள்மாவட்ட வன அலுவலர் செண்பகப்பிரியா தலைமையில் தொடங்கியது.

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ள இந்த கணக்கெடுப்பு பணிவனச்சரக அலுவலர் விமல்குமார் தலைமையில், வனக்காப்பாளர்கள், தோட்டக்காவலர்கள் மற்றும்வேட்டைத்தடுப்புக் காவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நடந்து வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணி நிறைவடைந்ததும் வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் உள்ள உயிரினங்கள் குறித்த விவரம் முழுமையாகத் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in