

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்துநடைபெறுகிறது.
இம்மையத்தில் மாவட்ட தேர்தல்அலுவலரான ஆட்சியர் கி. செந்தில்ராஜ், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஜுஜவரப்புபாலாஜி, (தூத்துக்குடி), அஸ்வானி குமார் சவுதாரி, (விளாத்திகுளம், கோவில்பட்டி), அனில் குமார், (ஓட்டப்பிடாரம்), தேர்தல் காவல் பார்வையாளர் சப்ய சாஷி ராமன்மிஸ்ரா மற்றும் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் நேற்று மீண்டும்ஆய்வு செய்தனர்.வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணுவாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறைகள், வாக்குஎண்ணிக்கை நடைபெறும் அறைகள் ஆகியவற்றை பார்வையிட்டுஅங்கு செய்ய வேண்டிய வசதிகள்குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இருப்பு அறைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், சிசிடிவி கேமராக்கள் கூடுதலாக பொருத்தவும், மின்சார வயரிங் பணிகளை பாதுகாப்பான முறையில் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் உத்தரவிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் கரோனா விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிப்பது என்பதுகுறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கும் பகுதிகளையும் பார்வையிட்டனர். ஆய்வின்போது சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங்கலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவிமற்றும் பல்வேறுதுறை அலுவலர்கள் உடனி ருந்தனர்.