பங்குனி உத்திரநாளின்போது கோயில்களில் - கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை :

பங்குனி உத்திரநாளின்போது கோயில்களில் -  கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை :
Updated on
1 min read

தமிழகத்தில், பங்குனி உத்திரத் திருநாள் முக்கிய வழிபாட்டு நாளாக இருந்து வருகிறது. நாளை (28-ம் தேதி) கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆத்தூரை அடுத்த வட சென்னிமலை முருகன் கோயில் உள்பட முக்கிய கோயில்கள் அனைத்திலும், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பக்தர்களும், கோயில் நிர்வாகத்தினமும் பின்பற்ற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் பக்தர்கள் அமரவும், பிரசாதம் விநியோகம் செய்யவும் அனுமதி கிடையாது.

கோயில் வளாகத்தில் பக்தர்கள் கைகளைக் கழுவுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருக்கும். கோயில் ஊழியர்களும் முகக்கவசம் அணிந்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in