

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் விருதுநகர் கருமாதி மடம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை துணியால் மூடப்பட்டிருந்தது. இச்சிலையை உரிய அனுமதியின்றி திறந்து வைத்ததாக அதிமுக விருதுநகர் மேற்கு ஒன்றியச் செயலாளரும் முத்துராமன்பட்டி ஆவின் கூட்டுறவுத் தலைவருமான கண்ணன் (45) மீது விருதுநகர் பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.