

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி 15 பறக்கும் படைகள் மற்றும் 15 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பறக்கும் படை அதிகாரி மோகன் தலைமையிலான குழுவினர் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மோட்டார் சைக்கிளை மறித்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, ரூ.5 லட்சம் இருந்தது.
தனியார் நிறுவனங்களிடம் பணம் வசூல் செய்து, அதை வங்கியில் செலுத்துவதற்கு எடுத்துச் செல்வதாகவும், தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிவதாக வும் அவர் கூறியுள்ளார். ஆனால் பணம் வசூல் செய்ததற் கான ஆவணங்கள் எதுவும் இல்லாத தால், பறக்கும் படை அதிகாரிகள் ரூ. 5 லட்சத்தை பறிமுதல் செய்து, பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.