வேலூர் தொகுதியில் வேட்பாளர்களின் செலவு கணக்குகள் ஆய்வு :

வேலூர் தொகுதியில் வேட்பாளர்களின் செலவு கணக்குகள் ஆய்வு :
Updated on
1 min read

வேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளராக ஆதர்ஷ் ஹர்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையிலான குழுவினர் தேர்தல் செலவினங்கள் குறித்துஆய்வு செய்யும் பணியை வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (26-ம் தேதி) தொடங்கி யுள்ளனர்.

அதன்படி, வரும் 30-ம் தேதியும், ஏப்ரல் 4-ம் தேதியும் வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான தினசரி செலவினம் குறித்த தணிக்கை மேற்கொள்ள உள்ளனர். எனவே, மேற்கண்ட தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள், தேர்தல் செலவின விவரங்கள், ஆவணங்களை தணிக்கை குழுவின் முன்பாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என வேலூர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in