பெண்ணை மிரட்டிய வழக்கில் இருவருக்கு தலா 4 ஆண்டு சிறை :

பெண்ணை மிரட்டிய வழக்கில் இருவருக்கு தலா 4 ஆண்டு சிறை :
Updated on
1 min read

திருநெல்வேலி அருகே பெண்ணைகத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில் இருவருக்கு தலா 4 ஆண்டுகள்சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி அருகே சங்கர்நகரைச் சேர்ந்தவர் பூர்ணவள்ளி. கடந்த 2016-ல் அங்குள்ள பேருந்துநிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது முன்விரோதம் காரணமாகஎட்டயபுரம் கருப்பூர் பகுதியைச்சேர்ந்த ஜோஸ்வா இம்மானுவேல்ராஜ் (35), சாத்தூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (29) ஆகியோர், கத்தியைக் காட்டி மிரட்டி,அவதூறாக பேசிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து, தாழையூத்து காவல் நிலையத்தில் பூர்ணவள்ளி புகார் தெரிவித்தார். அதன்பேரில், ஜோஸ்வா இம்மானுவேல் ராஜ், வினோத்குமார் ஆகியோரை, போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து ஜோஸ்வா இம்மானுவேல் ராஜ், வினோத்குமார் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி ராஜேஷ்குமார் தீர்ப்பு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in