கூடுதல் மின்னனு வாக்குச்சீட்டு இயந்திரங்களில் முதல்கட்ட பரிசோதனை :

கூடுதல் மின்னனு வாக்குச்சீட்டு இயந்திரங்களில் முதல்கட்ட பரிசோதனை :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் கூடுதலாக தேவைப்படும் வாக்குச்சீட்டு இயந்திரங்களில் முதல்கட்ட பரிசோதனை நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், வைகுண்டம் ஆகியநான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் 15 வேட் பாளர்களுக்கு மேல்போட்டியிடுவதால், இத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தலுக்கு 2 வாக்குச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக கூடுதலாக தேவைப்படும் 1,736 வாக்குச்சீட்டு இயந்திரங்கள் கிட்டங்கிகளில் இருந்து நேற்று முன்தினம் வெளியே எடுக்கப்பட்டன.

இந்த இயந்திரங்களில் பெல்நிறுவன பொறியாளர்கள் மூலம் முதல் கட்ட பரிசோதனை செய்யும்பணி புதுக்கோட்டையில் உள்ளதூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குச்சீட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை திறக்கப்பட்டு பரிசோதனை தொடங்கியது.

இப்பணிகளை மாவட்ட தேர்தல்அதிகாரியான ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஜுஜவரப்பு பாலாஜி (தூத்துக்குடி), அஸ்வானி குமார்சவுதாரி (விளாத்திகுளம், கோவில்பட்டி), அனில் குமார் (ஓட்டப்பிடாரம்), சுஷில் குமார் படேல் (திருச்செந்தூர்), சவின் பன்சால் (வைகுண்டம்) ஆகியோர் பார்வையிட்டனர்.

முதல் கட்ட பரிசோதனை முடிந்த பிறகு ரேண்டம் மூலம் இந்த வாக்குச்சீட்டு இயந்திரங்கள் 4 தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது மின்னனு வாக்குப்பதிவு இயந்திர ஒருங்கிணைப்பு அலுவலரான இஸ்ரோ நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பரிமளா, பெல் நிறுவன பொறியாளர்கள் அமன்சிங், ஜெ.பி.கவுதம் மற்றும் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குச்சீட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை திறக்கப்பட்டு பரிசோதனை தொடங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in