கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் 3 தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பு :

கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள்  3 தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பு  :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டத்தின் 8 சட்டப்பேரவைத் தொகுதியில் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திருப்பூர் தெற்கு, பல்லடம் மற்றும் காங்கயம் தொகுதிகளில் 16-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இடம்பெறுவதால், இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத் தில் குறைந்தபட்சம் 15 வேட்பாளர்களுக்கான சின்னங்களும், நோட்டாவுக்கான சின்னமும் இடம்பெறும். இந்நிலையில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று அனுப்பி வைத்தார்.

காங்கயம் தொகுதிக்கு 447, திருப்பூர் தெற்கு தொகுதிக்கு 481 மற்றும் பல்லடம் தொகுதிக்கு 657 என மொத்தம் 1585 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் 3 தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரேண்டம் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி நடந்தது. இதில் வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாகுல்ஹமீது (பொது), முரளி(தேர்தல்), தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்படபல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in