

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 56 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்றும் அதே நிலை நீடித்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகம் இருப்பதால், அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 100.53 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 100.41 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 65.37 டிஎம்சி-யாக உள்ளது.