

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான என்.லோகேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில், ஏப்ரல் 10-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், வைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தாலுகா சட்டப்பணிகள் குழுக்கள் மூலம் 10.04.2021 அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், பணம் வசூலிக்க வேண்டிய வழக்குகள், மோட்டார் வாகன விபத்துநஷ்டஈடு வழக்குகள், தொழிலாளர் பிரச்சினை வழக்குகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம்தொடர்பான வழக்குகள், மணவாழ்க்கை சம்பந்தமான வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் இழப்பீடு வழக்குகள், வருவாய் சம்பந்தமான வழக்குகள், பணி மற்றும் ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் அனைத்து வகையான உரிமையியல் வழக்கு களுக்கு தீர்வு காணப் படவுள்ளது. இவ்வாறு தெரிவிக் கப்பட்டுள்ளது.