

திருநெல்வேலி தாழையூத்து மற்றும் தாலுகா காவல் நிலையங் களில் வழிப்பறி, அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய தாழையூத்து சாரதாம்பாள் நகர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (19) , மேலதாழையூத்து காமிலா நகர் வெயில்குமார் (27) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியருக்கு, காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பரிந்துரை செய்தார்.
ஆட்சியர் உத்தரவின் பேரில் சுபாஷ், வெயில்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.