மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து - தமிழக தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம் :

மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து -  தமிழக தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம் :
Updated on
1 min read

தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம், தருமபுரி மாவட்ட காவேரிபட்டணம் ஆகிய இடங்களில் சுமார் 400 இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன.

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவைப்படும் அட்டை, பேப்பர், குச்சி, மெழுகு, குளோரேட் போன்றமூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் ஆகியவற்றின் உயர்வால் லாரி வாடகை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தீப்பெட்டியின் அடக்கச்செலவு அதிகரித்துள்ளது.

ஆனால், தீப்பெட்டி கொள்முதல் விலை அதிகரிக்கப்படவில்லை. எனவே, மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம்,நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மார்ச் 22 முதல் 31-ம் தேதி வரை 10 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று தமிழகத்தில் உள்ள தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. இதனால் ஆலைகளில்பணிபுரியும் 90% பெண் தொழிலாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உட்பட 4 லட்சம்பேர் வரை வேலை இழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in