

தமிழக அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங்பேடி வெளியிட்ட அரசாணை:
தோட்டக்கலை உதவி இயக்குநர் நேரடி நியமனத்துக்கு தோட்டக்கலை, பழ அறிவியல், பூ வளர்ப்பு மற்றும் இயற்கை காட்சி வடிவமைப்பு, காய்கறியியல், நறுமண பொருட்கள் மற்றும்மூலிகை தாவரங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் எம்எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு எம்எஸ்சி தோட்டக்கலை படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்கெனவே இருந்தது. தற்போது புதிதாக கல்வித் தகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.