

கிழக்கு தாம்பரத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 560 பேரிடம் நேற்று கரோனா மாதிரி சேகரிக்கப்பட்டது. இந்த பணியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ. ஜான் லூயிஸ் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் சிட்லபாக்கம் பகுதிகளில் கரோனா பரிசோதனை முகாம்களை அவர் பார்வையிட்டார்.
இதனிடையே தாம்பரம் சானடோரியம் நெஞ்சக நோய் மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் மற்றும் வகைப்படுத்தல் மையத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தையும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.