

பில்லா, ரேணிகுண்டா உட்பட பல்வேறு படங்களில் நடித்த நடிகர் தீப்பெட்டி கணேசன் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் நடிகர் தீப்பெட்டி கணே சன். இவருக்கு மனைவி, இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் ரேணிகுண்டா படம் மூலம் அறிமுகமானார். பின்னர் விஜய் சேதுபதியுடன் தென்மேற்குப் பருவக்காற்று, அஜித்துடன் பில்லா-2, கோலமாவு கோகிலா உட்படப் பல்வேறு படங்களில் நடித் துள்ளார். கடைசியாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கி உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணே கலை மானே' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கினார். இவர், தனது குழந்தைகளுக்கு பால் வாங்கக்கூட பணமின்றி வாடுவதாக வீடியோ வெளியிட்டிருந்தார். இதைப்பார்த்த நடிகர் லாரன்ஸ் உள்ளிட்டோர் உதவினர். பட வாய்ப்புகள் வராத தால் புரோட்டா கடையில் வேலை பார்த்தார். வறுமையால் மன உளைச்சலில் இருந்தார். அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பணம் இன்றி குடும்பத்தினர் தவித்தனர்.
அதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார்.
இது குறித்து இயக்குநர் சீனு ராமசாமி டுவிட்டர் பக்கத்தில், எனது படங்களில் நடித்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக் குறைவால் இறந்தார். அன்பு நிறை இதய அஞ்சலி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவு மூலமே தீப்பெட்டி கணேசன் மரணமடைந்த தகவல் திரையுலகினருக்கு தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் பிரச்சாரத்துக்காக மதுரை வந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஜெய்ஹிந்த்புரத்தில் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறு தல் கூறினார்.