

கல்லூரி முதல்வர் செ.அசோக் தொடக்க உரையாற்றினார். நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான சாமிநத்தத்தில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் 25-க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டிகளில் தயார் செய்யப்பட்ட செயற்கைக் கூடுகள் நிறுவப்பட்டன. சிட்டுக்குருவிகளை பேணிக் காப்பது பற்றி விழா ஒருங்கிணைப்பாளர் சு.பாலாஜி எடுத்துரைத்தார். விலங்கியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, சிட்டுக்குருவிகளின் வாழ்விடங்களை பாதுகாப்பது பற்றி பொதுமக்களிடம் விளக்கிக் கூறினர்.