கந்துவட்டி சட்டத்தில் 5 பேர் மீது வழக்கு :

கந்துவட்டி சட்டத்தில் 5 பேர் மீது வழக்கு :

Published on

மதுரை பழைய விளாங்குடி வருமானவரித்துறை காலனியைச் சேர்ந்த முரளி மனைவி உமா மகேசுவரி. இவர் 2019-ல் அதே பகுதியைச் சேர்ந்த னிவாசனிடம் அவசரத் தேவைக்காக ரூ.4 லட்சம் கடன் வாங்கினார்.

இதற்காக ரூ.13 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளார். இருப்பினும் கூடுதல் வட்டிகேட்டு னிவாசன் தொடந்து தொந்தரவு செய்து வந்தார்.

இதுகுறித்து உமா மகேசுவரி மதுரை கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், னிவாசன், அவரது தரப்பைச் சேர்ந்த நிர்மலா, கிரீஷ், பிரபாகரன், கனி ஆகியோர் மீது கந்து வட்டிச் சட்டத்தின் கீழ் போலீ ஸார் வழக்குப் பதிந்து விசாரிக் கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in