

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.என்.சிக்கந்தர் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி:
திமுக கூட்டணியினர் நாங்கள் வைத்த 20 கோரிக்கைகளை, தேர்தலில் வெற்றி பெற்ற பின் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர்.
அதனடிப்படையில் எங்களது அமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவின்படி சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அணி வேட்பாளர்களுக்கு எங்கள் ஆதரவை அளிக்கிறோம்.
பாஜகவுடன் கூட்டணி சேர்ந் துள்ள அதிமுகவுக்கு, கூடாநட்பு கேடாய் முடியும் என்ற பாடத்தை தமிழக மக்கள் இந்தத் தேர்தலில் புகட்டுவார்கள்.
தமிழகத்தில் சிறுபான்மை யினருக்கு இணக்கமான சூழல் உள்ளது. எனவே, இங்கு ஒவைசிகளுக்கு வேலை இல்லை என்றார்.
அப்போது, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சாகுல் அமீது, மக்கள் தொடர்பு அலுவலர் ஹைதர் அலி, இந்திய மாணவர் இஸ்லாமியர் அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவர் முகம்மது ஜாபர், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவர் கனி, மாவட்டத் தலைவர் சாதிக்பாட்சா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.