

தூத்துக்குடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
தேர்தலுக்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 2,097 வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாப்பிள்ளை யூரணி, சிலுவைப்பட்டி, டி.சவேரி யார்புரம், தாளமுத்துநகர், இராஜ பாளையம், அலங்காரதட்டு, சாமுவேல்புரம் மற்றும் திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களை எஸ்பி பார்வையிட்டார். வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் உள்ளனவா, அப்பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளதா என்பது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தகுந்த அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின்போது வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள், தாளமுத்து நகர் எஸ்ஐகள் மகாராஜா, திருமணி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.