திருவண்ணாமலையில் - விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated on
1 min read

விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உழவர் பேரவை சார்பில், திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் புரு ஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, “விவசாயிகளின் தனி நபர் வருமானம் என்பது ஆண்டுக்கு ரூ.4 லட்சம் மற்றும் ரூ.7 லட்சம் கிடைக்கும் என அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், அது எப்படி கிடைக்கும் என தெரிவிக்கவில்லை. கடந்த 2019-ல் தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில், விவசாயி யின் தனி நபர் வருமானம் என்பது ஆண்டுக்கு ரூ.64 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்றால் அரசு ஒப்பந்த பணியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு 200 நாள் ஊதியத்தை விவசாயின் வங்கி கணக்கில் நேரிடையாக சேர்க்க வேண்டும். கால் நடைகளுக்கு இலவச தீவனம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்குவதுபோல் விவசாயிகளுக்கு தமிழக அரசு ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்று செல்லும் போது பணப்பலன்கள் வழங்கப்படுகிறது. அதேபோல், 58 வயதை கடந்த விவசாயிக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். இதுபோன்ற திட்டங்கள் மூலமே விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை உயர்த்த முடியும்” என்றார்.

பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கமிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in