

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். மொத்தம் 17 இடங்களில் தணிக்கை மேற்கொள்ளப் பட்டது.
அப்போது முகக்கவசம்அணியாமல் வந்த 260 பேரைகாவல் துறையினர் தடுத்துநிறுத்தி கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினர்.
மேலும், தொடர்ச்சியாக முகக்கவசம் அணியாமல் செல்வது உள்ளிட்டவை கண்டறியப்பட்டால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.