

தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல் களை கண்காணிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவுறுத்தினார்.
சேலம் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு, சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில், பொதுப் பார்வையாளர்கள் வந்தனா சிங், பங்கஜ் யாதவ், தினேஷ் பிரசாத், சின்மயி புன்லிக் ராவ் கோட்மரே, டாக்டர் நிதின் மதன் குல்கர்னி, லால்ரின் லியானா பனாய், டாக்டர் ரூபேஷ் குமார், ராம சந்துருடு, தேர்தல் காவல் பார்வையாளர் சகேட் பிரகாஷ் பாண்டே, தேர்தல் செலவின பார்வையாளர்கள் பிரியதர்சி மிஸ்ரா, செபாலி வஸ்தவா அந்தலீப், வினோத் குமார், தர் கெடிலா, சுமிதா பரமதா, ஆனந்த் குமார் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நட வடிக்கைகள், தேர்தல் பிரச்சாரங்களில் விதிமீறல் களை கண்காணிப்பது, பிரச்சார செலவினங்களை துல்லியமாக கணக்கிடுவது, தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்படுவது, முக்கிய தலைவர்களின் பிரச்சாரங் களின்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மற்றும் அறிவுரைகளை மாவட்டட தேர்தல் அலுவலர் வழங்கினார்.
கூட்டத்தில் சேலம் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார், எஸ்பி தீபா காணிகர், மேட்டூர் துணை ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.