

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா மற்றும் வாழப்பாடி வனச்சரகத்தில் உலக வன நாள் விழா நடந்தது.
குரும்பப்பட்டியில் நடந்த விழாவுக்கு, மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமை வகித்தார். உயிரியல் பூங்கா வனச்சரகர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். விழாவையொட்டி, பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நடப் பட்டன.
வாழப்பாடி வனச்சரகம் சார்பில் புழுதிக்குட்டையில் நடந்த விழாவுக்கு, ஆத்தூர் கோட்ட உதவி வனப் பாதுகாவலர் முருகன் தலைமை வகித்தார். வனச்சரக அலுவலர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.