விருதுநகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது திமுக தான் :  சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு

விருதுநகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது திமுக தான் : சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு

Published on

விருதுநகருக்கு தாமிரபரணி தண்ணீரைக் கொண்டு வந்தது நாங்கள்தான் என்று திமுக தெற்கு மாவட்டச் செயலர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இதில் திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளருமான சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:

விருதுநகருக்கு தாமிரபரணி தண்ணீரைக் கொண்டு வந்தது நாங்கள்தான். விருதுநகரில் சீனிவாசனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

முன்னதாக, திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும் திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளருமான தங்கம் தென்னரசு பேசுகையில், சட்டப் பேரவையில் அனைத்துக் கோரிக்கைகளையும் எடுத்துக் கூறுபவர் சீனிவாசன். அவர் குரல் கொடுத்ததால்தான் இன்று தாமிரபரணி தண்ணீர் கிடைக்கிறது. இவரது வெற்றி மதச்சார்பற்ற அமைப்புகளுக்குக் கிடைக்கும் வெற்றி என்றார்.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in