

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சர்வதேச இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.
கட்டிடவியல், இயந்திரவியல், எலக்ட்ரிக்கல்-எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் துறைகளின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலாளர் கேஎஸ்.காசிபிரபு தலைமை வகித்தார். முதல்வர் சி.மதளைசுந்தரம் வரவேற்றார். இணைச்செயலாளர் ஏ.ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
ஈஸ்டன் பின்லேன்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜியாஜீகாவ், பங்களாதேஷ் சிட்டகாங் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திபானிக் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.
எதிர்கால தேவை அறிந்து ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தொழிற்நிறுவனங்களுக்கு ஏற்ற மாசில்லா பசுமை தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் குறித்து விளக்கினர்.
நாகர்கோவில் அண்ணா பல்கலைக்கழக கட்டிடவியல் துறை பேராசிரியர் கே.தனலட்சுமி, திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் வி.பிரேம்ஆனந்த், எம்.செந்தில்குமார், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் டி.கவிதா, ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியை ஏ.முத்துமாரி ஆகியோர் கலந்து கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளை தேர்வு செய்தனர். கல்லூரி இயந்திரவியல் பேராசிரியர் திரு.வேம்பத்துராஜேஸ் கருத்தரங்கின் அறிக்கையை சமர்பித்தார்.
மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன், பொதுச்செயலாளர் டி.ராஜ் மோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்