

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வாக்க ளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் கிரண்குராலா நேற்று தொடக்கி வைத்தார். தேர்தல் பொது பார்வையாளர் சந்திரசேகர் வாலிம்பே, தேர்தல் செலவினபார்வையாளர் பிரசன்னா வி.பட் டனசெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது:
தேர்தல் நேர்மையாகவும், அமைதியான முறையில் நடத்து வதற்கு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கிராமப்புறங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 3 அதிநவீன மின்னணு திரை வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளன. மக்கள் கூடும் இடங்களில் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப் பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. என்றார். இந்த நிகழ்ச் சியில் மாவட்ட வருவாய் அலுவ லர் சி.விஜய்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.