கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 560 வேட்பு மனுத்தாக்கல் :

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 560 வேட்பு மனுத்தாக்கல் :
Updated on
1 min read

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 560 வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாளான நேற்று வரை செஞ்சி சட்டமன்ற தொகுதியில் 32, மயிலம் 25, திண்டிவனம் (தனி) 31, வானூர் (தனி) 13, விழுப்புரம் 36, விக்கிரவாண்டி 30, திருக்கோவிலூர் 28 என 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 195 மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,569 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதன்படி உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் 29 பேரும், சங்கராபுரம் தொகுதியில் 28 பேரும், கள்ளக்குறிச்சி தொகுதியில் (தனி) 21 பேரும், ரிஷிவந்தியம் தொகுதியில் 29 பேரும் மனுத்தாக்கல் செய் துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் மொத்தம் 105 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கடலூர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in