குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் பிரச்சாரம் :

குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் பிரச்சாரம் :
Updated on
1 min read

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத் துக்கு உட்பட்ட நமங்குணம், பழமலைநாதபுரம், நக்கம்பாடி, கீழமாளிகை, மத்துமடக்கி, பிலாக்குறிச்சி, வீராக்கன், நாகல்குழி, கழுமங்கலம், பரணம், குமிழியம், இரும்புலிக்குறிச்சி, பாளையக்குடி, வாளரக்குறிச்சி, கிளிமங்கலம் உள்ளிட்ட கிராமங் களில் தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்டார்.

அப்போது, 2011 குன்னம் சட்டப் பேரவை உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்த போது, அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளேன். தற்போது இரண்டாவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடும் என்னை வெற்றிப் பெறச் செய்தால், மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in