மனைவி தேர்தலில் போட்டியிடுவதால் : போலீஸ் அதிகாரி இடமாற்றம் :

மனைவி தேர்தலில் போட்டியிடுவதால்  : போலீஸ் அதிகாரி இடமாற்றம் :
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகர குற்ற ஆவண காப்பக கூடுதல் துணை ஆணையராக இருந்தவர் வெள்ளத்துரை. சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்ற அதிரடிப்படையில் இருந்ததால், இரட்டை பதவி உயர்வு பெற்றவர். ரவுடிகள் என்கவுன்டரிலும் பெயர்பெற்றவர்.

இவரது மனைவி ராணி ரஞ்சிதம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்தவர். திருச்சி ஈ.வெ.ரா., கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். இவர், அம்பாசமுத்திரம் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இதுகுறித்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அன்பு, டிஜிபி அலுவலகத்துக்கு அறிக்கை அளித்திருந்தார்.

அதன்பேரில், வெள்ளத்துரை தேர்தல் அல்லாத பணியாக சென்னை தலைமையிட போலீஸ் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in