ஆத்தூர் தொகுதியில் - வீரக்கல் ஊராட்சி பகுதியில் ஆதரவு திரட்டிய ஐ.பெரியசாமி :

ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட வீ.கூத்தாம்பட்டியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி.
ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட வீ.கூத்தாம்பட்டியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி.
Updated on
1 min read

திமுக ஆட்சிக்கு வந்தால் கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட வீரக்கல் ஊராட்சி வட்டப்பாறை, வி.கூத்தாம்பட்டி, எஸ்.பாறைப் பட்டி உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி பிரச்சாரம் செய்தார். வீரக்கல் ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி தங்கவேல் தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்து வர வேற்றனர்.

கூட்டத்தில் ஐ.பெரியசாமி பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வீடுதோறும் வழங்கப்படும்.

அதிமுக அரசால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள முதி யோர் உதவித்தொகை வழங் கப்படும் என்று பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in