100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் :

திருவண்ணாமலையில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகன சேவையை நேற்று தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி .
திருவண்ணாமலையில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகன சேவையை நேற்று தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி .
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்படும் 3 வீடியோ வாகன சேவையின் தொடக்க விழா திருவண் ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடை பெற்றது.

ஆட்சியர் சந்திப் நந்தூரி தலைமை வகித்து, 3 விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள 100 சதவீதம் வாக்களிப்போம், கட்டணம் இல்லாத 1950 என்ற செல்போன் எண் வெளியீடு, சி-விஜில் கைபேசி செயலி உள்ளிட்ட விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்படவுள்ளன. இதில், மாவட்ட வருவாய் அலவலர் முத்துகுமாரசாமி, கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in