

தேர்தல் பணிக்கு செல்பவர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஓய்வுபெற்ற காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை அலுவலர்கள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரியில் ஓய்வு பெற்ற காவல்துறை, வனத் துறை, தீயணைப்புத்துறை அலுவலர்களின் நலச்சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவருமான ஓய்வு பெற்ற டிஎஸ்பி நாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக ஏடிஎஸ்பி ராஜி, கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன், மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி சங்கர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.
இதில் ஓய்வு பெற்ற ஏடிஎஸ்பி சூர்யகலா, டிஎஸ்பி ஞானசேகரன், வனத்துறை அதிகாரி ரபேல்ரெட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்வதுடன், கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தகுதியுள்ளவர்கள் அனைவரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட கேட்டுக்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.