திருப்பத்தூரில் கைதி சந்தேக மரணம் உடலை வாங்க மறுத்து உறவினர் போராட்டம் :

திருப்பத்தூரில் விசாரணைக் கைதி இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார்.
திருப்பத்தூரில் விசாரணைக் கைதி இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இரு தினங்களுக்கு முன் கிளைச் சிறையில் இருந்த விசாரணைக் கைதி திடீரென மரணமடைந்தார்.

காரைக்குடி பாப்பா ஊரு ணியைச் சேர்ந்த நீலகண்டன் (52), அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றார். அவரைக் கைதுசெய்து திருப்பத்தூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நீலகண்டனுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது வழியில் இறந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று மருத்துவ மனைக்கு வந்த நீலகண்டனின் உறவினர்கள் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகை யிட்டனர். போலீஸார் அவர்களைச் சமாதானப்படுத்தினர்.

தொடர்ந்து மருத்துவர்கள் முன்னிலையில் வீடியோ ஒளிப்பதிவுடன் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் நீலகண்டன் உடல் ஒப்படைக்கப்பட்டது. கைதி இறப்பு குறித்து காரைக்குடி நீதிபதி பிரபாகரன் விசாரணை நடத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in