தேர்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காத - வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

கிருஷ்ணகிரியில் நடந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் நிலை பயிற்சி வகுப்பை, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானுரெட்டி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரியில் நடந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் நிலை பயிற்சி வகுப்பை, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானுரெட்டி ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

உரிய காரணங்கள் இன்றி தேர்தல் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று, கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தேர்தல் முதல் நிலை பயிற்சி வகுப்பு நடந்தது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி தொடங்கி வைத் தார். நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத்தொகுதிகளிலும் தேர்தல் பணியில் வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை 1, நிலை 2, நிலை 3 அலுவலர்கள் உட்பட 11032 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் நடைபெறுகிறது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மண்டல அலுவலர், தேர்தல் நடத்தும்அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலு வலர்கள் மூலம் நடத்தப்படுகிறது.

மேலும், வாக்குச்சாவடி அலுவலர்களில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டுள்ள மற்ற அலுவலர்கள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். மேலும், உச்சபட்ச மருத்துவக் காரணங்களுக்காக விலக்கு கோரும் பட்சத்தில் அரசு மருத்துவக் குழுவின் நேரடி விசாரணையின் மூலம் மட்டுமே பரிசீலிக்கப்படும். உரிய காரணங்கள் இன்றி தேர்தல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணி யாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள அனைவரும் சிறப்பான முறையில் பயிற்சி பெற்று தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

தேன்கனிக்கோட்டையில் பயிற்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in