தூத்துக்குடி, திருச்செந்தூர் தொகுதியில் - அதிமுக, திமுக, தமாகா வேட்பாளர்கள் மனு தாக்கல் :

திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு  தாக்கல் செய்தார். (அடுத்த படம்) தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் பெ.கீதாஜீவன் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் கனிமொழி எம்பி.
திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார். (அடுத்த படம்) தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் பெ.கீதாஜீவன் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் கனிமொழி எம்பி.
Updated on
1 min read

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெ.கீதாஜீவன் நேற்று தனது வேட்புமனுவை, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் கலோனிடம் தாக்கல் செய்தார். அப்போது திமுகதென்மண்டல தேர்தல் பொறுப்பாளரான கனிமொழி எம்பி, காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் உடனிருந்தனர். திமுக சார்பில் மாற்று வேட்பாளராக மாவட்ட துணைச் செயலாளர் ஜே.ராஜ்மோகன் செல்வின் மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி தொகுதி தமாகாவேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது அண்ணன் மகன் அபிஷேக் மனு தாக்கல் செய்தார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேல்ராஜ் மனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக கட்சி நிர்வாகி பாக்கியராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்திய குடியரசு கட்சி சார்பில்சுபாஷ், சுயேச்சையாக வில்லிசைகலைஞர் ஜெயலலிதா ஆகியோரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். தூத்துக்குடி தொகுதியில் நேற்று மொத்தம் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருச்செந்தூர்

திமுக வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். கனிமொழி எம்பி உடனிருந்தார்.

அமமுக வேட்பாளர் வடமலை பாண்டியனும் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவர்களைத் தவிர மூன்று சுயேச்சைகள் என, திருச்செந்தூர் தொகுதியில் நேற்று மொத்தம் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வைகுண்டம்

மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் நேற்று ஒரே நாளில் 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 6 தொகுதிகளிலும் இதுவரை 52 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in