

தென்காசி அருகே இலத்தூர் விலக்கில் தேர்தல் பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரளாவில் இருந்து புளியங்குடி நோக்கிச்சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், எலுமிச்சை வியாபாரியிடம் ரூ.1.88 லட்சம் இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல், புளியரை பகுதியில் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் 2 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.4.47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கரன்கோவிலில் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய வாகன சோதனையில் ஒருவரிடம் இருந்து ரூ.1.10 லட்சம் தொகை உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.7.45 லட்சம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.