

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடர் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கி வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் ஒற்றையர் பிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால், கிடாம்பி காந்த், சாய் பிரணீத், பாருபள்ளி காஷ்யப், ஹெச்.எஸ்.பிரனோய், சமீர் வர்மா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவர்களுடன் முன்னணி வீராங்கனைகளான ஸ்பெயினின் கரோலினா மரின், ஜப்பானின் நவோமி ஒகுஹாரா ஆகியோரும் ஆடவர் பிரிவில் ஜப்பானின் கென்டோ மோமோடா, டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சன் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்கின்றனர். சிந்து தனது முதல் சுற்றில் மலேசியாவின் சோனியா ஹேவை எதிர்கொள்கிறார். கால் இறுதியில் சிந்து, ஜப்பானின் அகானே யமகுச்சியை சந்திக்கக்கூடும். சாய்னா தனது முதல் சுற்றில் டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டுடன் மோதுகிறார். ஆடவர் பிரிவில் காந்த், இந்தோனேஷியாவின் டாமி சுகிர்தோவை எதிர்கொள்கிறார்.