பாஜக ஆட்சியில் - லாபம் தனியாருக்கு : நஷ்டம் தேசத்துக்கு : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கு

பாஜக ஆட்சியில் -  லாபம் தனியாருக்கு : நஷ்டம் தேசத்துக்கு :  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கு
Updated on
1 min read

பொதுத்துறை வங்கிகளைத் தனியாருக்கு தாரை வார்ப்பது நாட்டின் நிதி பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாடுதழுவிய 2 நாள் போராட்டத்தை நடத்தினர். இதனால் பல்வேறு வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.

தனியார் மயமாக்குதல்

அவர் கூறியதாவது, பாஜக தலைமையிலான மத்திய அரசு லாபத்தை எல்லாம் தனியாருக்குக் கொடுத்துவிட்டு, நஷ்டத்தை தேசத்தின் மேல் சுமத்துகிறது.

மக்கள் சொத்துகளைத் தனியாருக்குக் கொடுப்பது நாட்டின் நிதி எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கும். பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்த ஊழியர்களுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in