

வால்பாறை வனச் சரக பகுதியில் இரண்டு ஆண் யானைகள் ஒன்றுக்கொன்று தந்தத்தால் தாக்கிக்கொண்டதில் ஓர் ஆண் யானை உயிரிழந்தது. இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநரின் உத்தரவுப்படி, வால்பாறை வனச் சரகர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அதிகாரிகள் முன்னிலையில் வனத் துறை கால்நடை மருத்துவர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.