

மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியில் மகளிர் தின விழா முதல்வர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் கார்த்திகைச்செல்வி வரவேற்றார். துணை முதல்வர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
பெண்கள் ஆளுமை மையம் சார்பில் நடைபெற்ற விழா வில், காமராசர் பல்கலை. பதிவாளர் வசந்தா பங்கேற்றுப் பேசுகையில், தனித்திறமையைக் கண்டு அதனை வளர்த்தால் பெண்கள் வாழ்க்கையில் வெற்றி அடையலாம். நாட்டில் உயர்கல்வித் துறையில் பெண்கள் அதிகமாகப் பங்கேற்றாலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பங்கு குறைவாக உள்ளது என்றார். விழாவில், கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழ்த் துறைப் பேராசிரியர் சமுத்திரச்செல்வி நன்றி கூறினார்.