

இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் களில் 3 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், அணைக்கட்டு, விருத்தாச்சலம், கெங்கவல்லி(தனி) தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இந்திய ஜனநாயக கட்சியின் சார்பாக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அணைக்கட்டு-ராஜசேகர், விருத்தாச்சலம்-ஆர்.பார்த்தசாரதி, கெங்கவல்லி(தனி)-கே.பெரியசாமி ஆகியோரை புதிய வேட்பாளராக நியமித்துள்ளோம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் ரவிபச்சமுத்து கூறியுள்ளார்.
இதே போல், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மணவெளி-வீரசேகரன், மண்ணாடிப்பட்டு-சிவக்குமார், முதலியார்பேட்டை-ஏ.ஜெகன்நாதன்,உழவர்கரை-எஸ்.தட்சிணாமூர்த்தி, பாகூர்-ஏ.தியாகு, வில்லியனூர்-ஆ. தியாகு, முத்தையால்பேட்டை-ஜி.மகேஷ், காமராஜர்-சகாயராஜ், அரியாங்குப்பம்-இந்துமதி, லாஸ்பேட்டை- கோபிகண்ணன், உப்பளம்-அருளானந்தம், நெட்டப்பாக்கம்(தனி)-வேலு, இந்திராநகர்-ஏழுமலை, காரைக் கால் வடக்கு- நெப்போலியன், டி.ஆர்.பட்டணம்- செல்லமுத்து, கதிர்காமம்-சத்தியவேல், ராஜ்பவன்- மு.சத்தியன்(எ) விமலன், ஊசுடு(தனி)-எம்.ரமேஷ், திருபுவனை(தனி)-சிவராமன், ஏம்பலம்(தனி)- வைத்தியலிங்கம், உருளையன்பேட்டை-புருஷோத்தமன், காலாப்பேட்-சுப்புலட்சுமி ஆகியோர் போட்டியிட உள்ளதாக இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து நேற்று அறிவித்தார்.