திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கருத்து

திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள் :  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கருத்து
Updated on
1 min read

திமுக தலைவர் ஸ்டாலின் பொய் யான வாக்குறுதிகளை கூறி வருகிறார் என மாநில போக்கு வரத்துத் துறை எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கரூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அப்போது, கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசின் சாதனை விளக்க புத்தகத்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்டு பேசியது:

கரூரில் திமுகவின் கூடாரம் தேர்தலுக்கு முன்பே காலியாகி விடும். ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி பொய்யான வாக்குறுதி அளித்தார். அதுபோல, இப்போது திமுக தலைவராக உள்ள ஸ்டாலின் தந்தையை போலவே பொய்யான வாக்குறுதிகளை கூறி வருகிறார். அதனை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.

திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி ஒவ்வொரு முறையும் நான் ஊழல் செய்து சம்பாதித்த சொத்துப்பட்டியலை வெளியிடுவதாகக்கூறி வருகிறார். பல ஆண்டுகளாக எங்கள் குடும் பத்தினர் கஷ்டப்பட்டு சம்பாதித் துள்ளனர். நீங்கள் என் சொத்துப் பட்டியலை வெளியிடத் தேவை யில்லை. நானே எனது சொத்து விவரத்தை வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ளேன் என்றார்.

எம்.பி. மு.தம்பிதுரை, கிருஷ் ணராயபுரம் எம்எல்ஏ ம.கீதா உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in