பெரம்பலூர், குன்னம் தொகுதிகளில் - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று முதல்கட்ட பயிற்சி வகுப்பு :

பெரம்பலூர், குன்னம் தொகுதிகளில் -  வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று முதல்கட்ட பயிற்சி வகுப்பு   :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு இன்று(மார்ச் 17) நடைபெறுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 816 வாக்குச்சாவடி மையங்களில் மொத்தம் 3,920 அலுவலர்கள் பணியாற்றவுள்ளனர். இவர்க ளுக்கு மார்ச் 17(இன்று) அன்று முதற்கட்ட பயிற்சி வகுப்பும், மார்ச் 27 அன்று இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பும், ஏப்.2 அன்று இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பும், ஏப்.5 அன்று மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பும் நடைபெற உள்ளன.

அதன்படி, பெரம்பலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் பணியாற்ற உள்ள 2,177 அலுவலர்களுக்கு கோல்டன் கேட்ஸ் பள்ளியிலும், குன்னம் சட்டப் பேரவைத் தொகுதியில் பணியாற்ற உள்ள 1,739 அலுவலர்களுக்கு மேலமாத்தூரில் உள்ள ராஜவிக் னேஷ் மேல்நிலைப் பள்ளியிலும் முதல்கட்ட பயிற்சி வகுப்பு இன்று(மார்ச் 17) நடைபெறுகிறது.

பயிற்சியில் கலந்துகொள்ளும் அலுவலர்கள் கரோனா முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை பின் பற்றி அனுமதிக்கப்பட உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in