

பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான வளாகத் தேர்வுகோவில்பட்டி லட்சுமி அம்மாள்பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. கோவை முருகப்பா குழுமத்தின் சாந்தி கியர்ஸ் நிறுவனம் சார்பில் நடந்த இத்தேர்வில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும்மாணவர்கள் 420 பேர் கலந்து கொண்டனர். சாந்தி கியர்ஸ் நிறுவன தொழில்நுட்ப பயிற்சி தலைவர் எஸ்.சபாபதி, மத்தியதிட்டமிடல் தலைவர் பி.சதீஸ்குமார், உற்பத்தி துறை தலைவர்ஆர்.ஞானவேல், மனிதவளத்துறை மேலாளர் கீதாமணி ஆகியோர் தேர்வை நடத்தினர்.
முதல் சுற்று எழுத்து தேர்வில் 112 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட நேர்காணலில் 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 31 பேர் பணிக்கு தேர்வாகினர். இவர்களுக்கு சாந்தி கியர்ஸ் நிறுவனம் சார்பில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.