

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பிஎம்டி. மக்கள் பாதுகாப்பு இயக்கம், அறக்கட்டளை மற்றும் அனைத்து மறவர் நல கூட்டமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு ஆலோசகர் செ.விஜயகுமார் தலைமை வகித்தார்.
அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்ராஜ், மாநிலப் பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளை நிறுவனர் இசக்கிராஜா, சக்திவேல், கூட்டமைப்பு மாநிலத் துணைத் தலைவர் மயில்மணி பாண்டியன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், தேவரினம் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலநீலிதநல்லூர் கல்லூரியை தனியாரிடம் இருந்து மீட்டு, மீண்டும் தேவர் சமுதாயத்திடம் ஒப்படைக்க வேண்டும். டிஎன்டி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மறவர் நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பிஎம்டி. மாநில துணைத் தலைவர் சிவகங்கைசெல்வம், பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவர் செல்லத்துரை, கூட்டமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.